பொது செய்தி

தமிழ்நாடு

காற்றில் பறந்தது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு: அமர்க்களமாக நடந்த அமைச்சர் இல்ல திருமணம்!

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
உடுமலை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கொரோனா ஊரடங்கு விதிமுறை, தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, கால்நடைத்துறை அமைச்சர் இல்ல திருமண விழா பிரமாண்டமாக நடந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன்
 காற்றில் பறந்தது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு: அமர்க்களமாக நடந்த அமைச்சர் இல்ல திருமணம்!

உடுமலை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கொரோனா ஊரடங்கு விதிமுறை, தொற்று பரவல் தடுப்பு நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, கால்நடைத்துறை அமைச்சர் இல்ல திருமண விழா பிரமாண்டமாக நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.


latest tamil news




'கொரோனா' ஊரடங்கு விதிமுறைகள், தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில், 50 பேருக்கு மேல் அனுமதியில்லை என அரசு கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதலே, கூட்டம் களைகட்டியது. நேற்று காலை, 15 அமைச்சர்கள், அரசு துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை, 10:00 மணி முதல் அரசுத்துறை அதிகாரிகளும், மதியம், 3:00 மணிக்கு மேல், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அபரிமிதமான கூட்டம் காணப்பட்டது.

தென்னந்தோப்பில், விருந்தினர்களுக்கு தனி பந்தல் அமைத்து, 'பபே' முறையில் உணவு பரிமாறப்பட்டது. சமையல் செய்வதற்கு, தனி கூடம் அமைத்து, இரு நாட்களாக சமையல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர் என அனைவரும், கூட்டமாகவே வலம் வந்தனர். சென்னையில் 'கொரோனா' உச்சம் தொட்ட நிலையில், அங்கிருந்தும் ஏராளமான அதிகாரிகள் வந்திருந்தனர்.

அமைச்சர் வீட்டு திருமணம் என்பதால், 300க்கும் மேற்பட்ட போலீசார், கிராமத்திலும், பிரதான ரோடுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 'கொரோனா' தொற்று குறித்த அச்சம் இல்லாமல், அமைச்சர் இல்ல திருமணம் நடந்தது, அதிர்ச்சியடைய வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202018:57:32 IST Report Abuse
VSK எடப்பாடி இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
15-ஜூன்-202023:55:48 IST Report Abuse
Charles கல்யாண விருந்துகளில் சரக்கு இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
14-ஜூன்-202013:38:38 IST Report Abuse
venkata achacharri தனி மனிதன் ரோட்டில் போனால் அபராதம் அவர்கள் வண்டி பறிமுதல் டான்ஸ் தண்டனை தோப்பு Karanam போடா தண்டனை எல்லோரும் அவர்கள் எல்லோரும் இப்போ ஒருங்குஇணைத்து கோர்ட் க்கு போகவேண்டும் அவங்க அபராதம் திருப்பித்தர வேண்டும் அல்லது இவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X