தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!

Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (3)
Share
தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!''ஆதரவாகவும், எதிராகவும் வலைதளத்துல மோதிக்கிட்டாங்க...'' என, நாயர் கடையில், விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.பில்டர் காபியை பருகியபடியே, ''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்துல, 97வது பிறந்த நாள் வந்துச்சுல்ல... அப்ப, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்புல,
 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!
''ஆதரவாகவும், எதிராகவும் வலைதளத்துல மோதிக்கிட்டாங்க...'' என, நாயர் கடையில், விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
பில்டர் காபியை பருகியபடியே, ''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்துல, 97வது பிறந்த நாள் வந்துச்சுல்ல... அப்ப, தி.மு.க.,
தகவல் தொழில்நுட்ப அணி சார்புல, 'பாதர் ஆப் மாடர்ன் தமிழ்நாடு'ன்னு, 'ஹேஷ்டேக்' உருவாக்கியிருந்தாங்க...
''இது, தேசிய அளவுல முதல் இடத்துல, 'டிரெண்டிங்' ஆகியிருக்கு... இதைப் பார்த்த, பா.ஜ.,காரங்க விடுவாங்களா... அவங்க பதிலடியா, 'பாதர் ஆப் கரப்ஷன்'னு ஹேஷ்டேகை உருவாக்கி, அக்கப்போர் பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பதவிக்கு ஒரு கட்சி; பரிந்துரைக்கு வேற கட்சியான்னு பட்டிமன்றம் நடக்கறது ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''எங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''வேலுார் மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., வின், தகவல் தொழில்நுட்ப செயலரா இருக்கறவர், ஜனனி சதீஷ்குமார்... வேலுார் மாவட்டத்தை, மூணா பிரிச்சதை அடுத்து, புதுசா உருவான, வேலுார் மாவட்டச் செயலர் பதவியை எதிர்பார்த்து, காய் நகர்த்திண்டு இருந்தாங்க ஓய்...
''வேலுார் லோக்சபா தொகுதியில, அ.தி.மு.க., கூட்டணியில நின்னு தோத்து போன, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இவருக்கு சிபாரிசு பண்ணியிருக்கார்... இதுக்காக, இ.பி.எஸ்., - பன்னீர்செல்வத்திடம் பேசி, மாவட்டச் செயலர் பதவியை, 'ரிசர்வ்' செஞ்சுண்டுட்டாங்க...
''இதைத் தான், 'பதவி கேட்கறது, அ.தி.மு.க.,வில்; பரிந்துரை கேட்கறது, கூட்டணிக் கட்சியிலா'ன்னு, மாவட்ட, அ.தி.மு.க.,வினர் கிண்டலடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அரசாங்கத்துல சம்பளம் வாங்கிட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கூடவே சுத்திட்டு இருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி, திருவெறும்பூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி... இவரது சொந்தக்காரர் அருண், பொதுப்பணித் துறையில வேலை பார்க்காரு வே...
''ஆனா, மகேஷ் கூடவே தான் சுத்திட்டு இருக்காரு... அவருக்கு, பி.ஏ., மாதிரி இருந்து, எம்.எல்.ஏ.,வின் அனைத்து வேலைகளையும் கவனிச்சிட்டு இருக்காரு வே...
''அப்பப்ப, பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு போய், கையெழுத்து மட்டும் போட்டுட்டு வந்துடுதாரு... 'வேலைக்கு போகாம, அரசாங்க சம்பளத்தை வாங்கிட்டு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கு, சேவகம் பண்ற கூத்தெல்லாம், 'அம்மா' இருந்தா நடக்குமா'ன்னு, ஆளுங்கட்சியினரே புலம்புதாவ வே...'' என்றார்,
அண்ணாச்சி.டீக்கடைக்கு மேலும் சிலர் வர, சமூக இடைவெளி அவசியம் என்பதால், பெரியவர்கள், 'மளமள'வென, வீட்டை நோக்கி
நடந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X