இதே நாளில் அன்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 11, 2020
Share
இதே நாளில் அன்று

ஜூன் 12, 1932

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், பூஜாப்புர பகுதியில், 1932 ஜூன், 12-ம் தேதி பிறந்தவர், பத்மினி. 4 வயதிலேயே நாட்டிய அரங்கேற்றம் செய்தார். பத்மினி, அவரது சகோதரிகள் லலிதா, ராகினி ஆகியோர், புகழ்பெற்ற நாட்டிய கலைஞர்களாக விளங்கினர். 'திருவாங்கூர் சகோதரிகள்' என்றழைக்கப்பட்டனர். இவர்கள் நடனமாடி, 1947 ல் வெளிவந்த முதல் திரைப்படம், கன்னிகா. முப்பது ஆண்டுகளாக, திரையுலகில் கொடிக்கட்டி பறந்த பத்மினி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என, 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த, 1961-ல், டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்த பத்மினி, பட உலகில் இருந்து விலகி, அமெரிக்காவில் வசித்தார். அங்கு, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பின், சில படங்களில் நடித்தார். 2006 செப்., 24ம் தேதி காலமானார்.'நாட்டியப் பேரொளி' பத்மினி பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X