பொது செய்தி

இந்தியா

ராகுல் கருத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
ராகுல் கருத்து, முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்

புதுடில்லி : லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின், லடாக் எல்லையில், சீனா, தன் ராணுவத்தை குவித்தது. இதையடுத்து, இந்தியாவும் ராணுவத்தை குவித்தது.

இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'இது பற்றி, காங்கிரஸ், எம்.பி., ராகுல், 'டுவிட்டரில்' நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், 'லடாக்கில் சீனர்கள் நடந்து வந்து, நம் பகுதியைக் கைப்பற்றினர். ஆனால், இந்த விஷயத்தில், பிரதமர் அசாத்திய மவுனம் காத்து வருகிறார். இப்போது, அவர் மக்கள் பார்வையிலேயே இல்லை' எனக் கூறியிருந்தார்.ராகுலின் இந்த கருத்துக்கு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விமானப்படை முன்னாள் துணை தளபதி, சஞ்ஜித் போர்டோலோய், முன்னாள் கமாண்டர், குரோவர், ஓய்வு பெற்ற பிரிகேடியர், தின்கர் அதீப் உட்பட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பலர், கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நம் நாடு தொடர்பான பிரச்னையில், அடுத்த நாட்டுக்கு சாதகமாக கருத்து தெரிவிப்பதை, ராகுல் வழக்கமாக கொண்டுஉள்ளார். 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' விவகாரத்தில், அவர் தெரிவித்த கருத்துகளை, பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டன. ராகுலின் கருத்து, தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.இப்போது, லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பான விவகாரங்களில், நம் ராணுவத்தை அவமதிக்கும் வகையில், ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

ராணுவம் தொடர்பான விவகாரங்களை, அரசியல் லாபத்துக்காக விமர்சிப்பது நல்லதல்ல. இப்படிப்பட்ட கருத்துகள், ராணுவத்தினரின் உறுதியை குலைக்கும்.கடந்த, 1962ல், சீனா, நம் எல்லையை ஆக்கிரமித்தது. அப்போது, நம் ராணுவம், போருக்கான தயார் நிலையில் இல்லை. பெரும் பாதிப்புஆனால், நம் வீரர்கள் தீரத்துடன் போராடி, சீன ராணுவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை, ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லையை பாதுகாக்க, நம் வீரர்கள், கடும் நெருக்கடியான சூழ்நிலையில், போராடி வருகின்றனர். அதை சீர்குலைக்கும் வகையில், ராகுல் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.RAJA PANDIAN - zahle,லெபனான்
19-ஜூன்-202017:23:19 IST Report Abuse
A.RAJA PANDIAN உண்மையான பெயரில் வராது பொறம்போக்கு
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-ஜூன்-202017:18:52 IST Report Abuse
Tamilnesan வெற்றிக்கொடி கட்டு (மதராஸ்) போன்ற தேச துரோக சக்திகள் இருக்கும்வரை புப்புவுக்கு கொண்டாட்டம் தான்.
Rate this:
Cancel
nsathasivan - chennai,இந்தியா
12-ஜூன்-202020:50:57 IST Report Abuse
nsathasivan Pappu does not know anything about our nation.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X