அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: முதல்வர் திட்டவட்டம்

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: முதல்வர் திட்டவட்டம்

சேலம் : ''கொரோனா பாதிப்பில், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
கொரோனா பாதிப்பால், அரசு மருத்துவமனையில் இறப்போரின் எண்ணிக்கை, அரசுக்கு தெரியும். தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் தகவல்களையும் ஒருங்கிணைத்து, அறிவிக்கப்படுகிறது. இதில், எதையும் மறைக்க முடியாது.கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தால், அது அனைவருக்கும் தெரிந்து விடும். இதை மறைப்பதால், அரசுக்கு எந்த நன்மையும் இல்லை. தினமும் சுகாதாரத் துறை மூலம், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோரின் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கிறோம்.

இதுவரை, ஆறு லட்சத்து, 9,856 பேருக்கு, தொற்று பரிசோதனை செய்துள்ளோம். இந்தியாவில், அதிக பரிசோதனை மேற்கொண்ட மாநிலம் தமிழகம் தான்.ஏற்கனவே, கேன்சர், சர்க்கரை, இதய, சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் இறப்பு தான் அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு.

அரசு, தனியார் மருத்துவமனைகளில், ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இந்தியாவில், தமிழகத்தில் தான், அதிகமாக, 3,384 'வென்டிலேட்டர்'கள் உள்ளன.சமூக பரவல் என்றால், அனைவருக்கும் தொற்று ஏற்படுவது. அப்படி ஏற்பட்டிருந்தால், நாம் இங்கு ஒன்றாக இருக்க முடியாது. பாதிக்கப்பட்டோர், அவர்கள் தொடர்பில் இருந்தோர் என, அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில், சமூக பரவல் ஏற்படவில்லை. சென்னை, மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம். குறுகலான சிறிய தெருக்கள் அடங்கியது. இதனால், அங்கு எளிதாக பரவுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும், பல துறையினரும் ஒருங்கிணைந்து, நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். இதை மக்கள் உணர்ந்து, சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், ஏற்கனவே அறிவித்துள்ள தளர்வு போதுமானது. கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே ஊரடங்கு உள்ளது. கட்டுப்பாடில்லாமல் போனால், தொற்று வேகமாக பரவி விடும்.
நோய் அறிகுறி உள்ளோர், அருகிலுள்ள மருத்துவமனையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, சிகிச்சை பெற்றால், நோயில் இருந்து விடுபடலாம். இதற்கு, ஒரே மருந்து, ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து, அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மேம்பாலத்துக்கு ஜெ., பெயர்


சேலம், ஐந்து ரோட்டை மையமாக வைத்து, 441 கோடி ரூபாய் செலவில், 7.8 கி.மீ.,க்கு கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:சேலம் மாநகரில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையை, 2012ல், முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தேன். இதற்கு உடனடியாக நிதி அளித்து, பணிகளை துவங்கி வைத்தார். அவர், மண்ணிலிருந்து மறைந்தாலும், அவர் அறிவித்த திட்டம், நம் கண் முன் காட்சியளிக்கிறது.
அவரது நினைவாக, அவரை போற்றும் விதமாக, 'புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம்' என, பெயர் சூட்டப்படுகிறது.அதேபோல், குரங்குச்சாவடி முதல், ஏ.வி.ஆர்., ரவுண்டானா வரை கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு, 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மேம்பாலம்' என, பெயர் சூட்டப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.


மேட்டூர் அணை இன்று திறப்புசேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் ஜூன், 12ல், அணையில் இருந்து திறக்கும் நீர் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 12.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும்.பாசனத்துக்கு நீர் திறக்க, அணையில் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல் நீர் இருக்க வேண்டும். 2008ல் நீர்மட்டம், 103 அடியாக இருந்ததால், ஜூன், 12ல் நீர் திறக்கப்பட்டது.
நடப்பாண்டு, மேட்டூர் அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் இருந்ததால், 12 ஆண்டுகளுக்கு பின், குறித்தபடி ஜூன், 12ல், இன்று நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் இ.பி.எஸ்., காலை, 9:00 மணிக்கு தண்ணீரை திறந்து விடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
14-ஜூன்-202013:24:06 IST Report Abuse
Tamilnesan இரண்டு நாட்கள் முன்பு, தமிழக அமைச்சர் ஒருவர் சொன்னார்... தமிழத்தில் சமூகப்பரவலா இல்லையா என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும் என்றார். தற்போது முதல்வர் இதற்கு நேர்மாறாக சொல்கிறார். இதை படிக்கும்போது பரமார்த்தகுரு கதை தான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202001:23:03 IST Report Abuse
தல புராணம் "சமூகத்துக்கிட்டே" யாராவது உண்மையை சொல்லுங்க அடிமைகளே..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-202016:35:09 IST Report Abuse
தல புராணம் // சமூக பரவல் என்றால், அனைவருக்கும் தொற்று ஏற்படுவது. அப்படி ஏற்பட்டிருந்தால், நாம் இங்கு ஒன்றாக இருக்க முடியாது.. //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X