சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தொலைந்த வசந்தங்கள் திரும்புகின்றன!

Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தொலைந்த வசந்தங்கள் திரும்புகின்றன!

கொரோனாவை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தை செலவழித்தது குறித்து, எழுத்தாளர் சிவசங்கரி: இந்த காலத்தில், நான் தனியாக தான் இருக்கிறேன்; 77 வயதாகிறது. எனக்குத் துணையாக, ரொம்ப காலமாக, ஒரு அம்மா இருக்கிறார்.
காலை, 4:00 மணிக்கெல்லாம் எழுந்து, தியானம் செய்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு, நடைபயிற்சி சென்று, காலை உணவு முடிப்பேன். சிறிது நேரம், பாட்டுப் புத்தகங்களை எடுத்து வைத்து, பாடி பார்ப்பேன். இசை, நம் மனதுக்கும் உடலுக்கும் ஒரே நேரத்தில் சந்தோஷம் தந்து, இளமையாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளக் கூடியது. இரவில், சிறிது நேரம், 'டிவி' பார்ப்பேன்.
இந்த ஊரடங்கு, நம் தலைமுறை இதுவரை சந்தித்திராத ஒரு வித்தியாசமான சூழல். என்றாலும், குடும்பத்துடன் ஒரு நெருக்கமான இணைப்பையும், பிணைப்பையும் உருவாக்கும் காரணியாகவும் இந்த நாட்களைப் பார்க்க முடிகிறது.
வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்து, வீட்டுக்குள் உட்கார வைத்து விட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகு, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
நாம் அனுபவிக்காத, ஒரு சுகமாக இது இருக்கிறது. தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன.
எலியும், பூனையு மாக இருந்த எத்தனையோ தம்பதியரை, இந்த ஊரடங்கு, ஒரே வீட்டுக்குள் வைத்து பூட்டியிருக்கிறது. பல குடும்பங்களில் புரிந்துணர்வு, இணக்கம், நெருக்கம் ஏற்பட்டிருக்கின்றன. இது மிகப் பெரிய விஷயம்.
மாதக்கணக்காக கவுன்சிலிங் கொடுத்தால் கூட, இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் இன்னும் சில நல்ல விஷயங்களும் உள்ளன. சக மனிதர்களுக்கு உதவக்கூடிய குணம் வளர்ந்துள்ளது. வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்படுகிறவர்களுக்கு, உணவு கொடுத்து பலர் ஆதரிக்கின்றனர். நம் பழைய பழக்க வழக்கங்கள், பாரம்பரிய உணவை கேலி, கிண்டல் செய்தவர்களுக்கு அவற்றின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது.
மனதுக்கும் ஆரோக்கியத்தையும், புத்திக்குக் கூர்மையையும் தரும் பல்லாங்குழி, தாயக்கட்டை விளையாட்டுகள் மீண்டும் உயிர் பெற்றிருக்கின்றன.
உறவுகளையும், நட்புகளையும், 'வீடியோ கால்' இணைக்கின்றன. விட்டுப்போனவர்கள், பிரிந்து போனவர்கள் எல்லாம் மீண்டும் சேர்வதற்கான அன்புப் பாலங்கள் கட்டப்படுகின்றன.
சுற்றுப்புறச்சூழல் மாசு அடைந்திருந்த நிலை மாறி, இப்போது துாய்மையான காற்று எங்கும் பரவி வருகிறது.
ஒரு கடினமான சூழ்நிலை தான், புதுமையான கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்று சொல்வர். இந்தக் கடினமான நாட்கள், நமக்குப் புதியதொரு வாழ்க்கை முறையைத் தரும் என்பது மட்டும் நிஜம்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
12-ஜூன்-202009:31:22 IST Report Abuse
Ganapathy நன்றி திருமதி சிவசங்கரி . கொரோன காலம் மிகவும் வேதனைக்குரிய காலம். என்றபோதிலும் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த கொரோன எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது . என்வீட்டில், நான் , பெற்றோருடன் வசித்துவருகிறேன், சென்ற மார்ச் மமாதத்தில் ஒரு வார விடுமுறை எடுத்து எனது தம்பி , தம்பி மனைவி, இரு சிறு பிள்ளைகளுடன் எங்களை காண வந்தார்கள் . அலுவல் காரணமாக அவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். திரும்பி செல்லும் நாட்களுக்கு முன்பு லாக் டோவ்ன் தொடங்கப்பட்டுள்ளது . சென்ற மூன்று மாதங்களாக எனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் . ஒரே வீட்டில் கூட்டுகுடும்பமாய் , சின்னம் சிறு கைப்பிள்ளை முதல் , வயதான பெற்றோருடன் வாழ்ந்து இருந்தோம் . ஒரு வீட்டைல் மழலை குரல் கேட்பது எத்துணை இன்பம்பயக்கும் என்பதை நன் உணர்ந்தேன். சென்றவாரம் அவர்கள் திரும்ப சென்றுவிட்டனர் . எல்லோர் கண்ணிலும் கண்ணீர் .பிரிவை தாங்கமுடியாமல் என்ன அன்னையர் அழுதேவிட்டார். குழந்தைகள் தாத்தா பாட்டியை விட்டு பிரிய மனம் இல்லாமல் அழுகை, அன்பு முத்தகங்கள் வேறு. அவர்கள் ஊருக்கு திரும்பியவுடன், வெளியில் சென்று வீட்டுக்கு வந்தால் , ஒரே நிசப்தம், பிள்ளைகள் அடிக்கும் லூட்டியை கண்டு மகிழ்ந்தவர்கள், இப்போது வெறும் சுவற்றையம் , தொலைக்காட்சியை மட்டுமே கண்டு , காலத்தை போக்குகின்றனர் . கூட்டு குடும்பமாய் இருக்கும்போது , பல பிரச்சனைகள் வந்தாலும் , அதன் தன்மையே வேறு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல், பராமரிப்பு, நமக்கும் ஒரு சொந்தம் இருக்கிறது என்பதை நினைக்கும்போது , எந்த பிரச்னையும் ஒரு தூசுடன். கொரோன ஒரு கொடிய காலம் என்றாலும் , என்னை பொறுத்தவரை, ஒரு இனிமையான காலமே
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-ஜூன்-202008:52:06 IST Report Abuse
vbs manian அருமையான எழுத்தாளர் ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X