பொது செய்தி

இந்தியா

நிறம் மாறிய ஏரி: மக்கள் ஆச்சரியம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அவுரங்காபாத்; மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் அமைந்துள்ள, லோனார் ஏரியில் உள்ள நீரின் நிறம் திடீரென, இளஞ்சிவப்பாக மாறியுள்ளது. இது, உள்ளூர் மக்களையும், விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி, மிகச் சிறந்த
 நிறம் மாறிய ஏரி: மக்கள் ஆச்சரியம்

அவுரங்காபாத்; மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் அமைந்துள்ள, லோனார் ஏரியில் உள்ள நீரின் நிறம் திடீரென, இளஞ்சிவப்பாக மாறியுள்ளது. இது, உள்ளூர் மக்களையும், விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி, மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். மேலும், புவியியல் நிபுணர்களும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்வர்.இங்கே, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மிகப் பெரிய, விண்கல் விழுந்து, இந்த ஏரி உருவானதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட வட்ட வடிவில் இது அமைந்துள்ளது. இது, 1.2 கி.மீ., விட்டம் கொண்டது. இந்த ஏரியில் உள்ள நீரில், உப்பின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.இந்த ஏரியில் உள்ள நீரின் நிறம் திடீரென இளஞ்சிவப்பாக மாறியுள்ளது. இது உள்ளூர் மக்களையும், விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இது குறித்து, லோனார் ஏரி பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு குழு உறுப்பினர், கஜனன் கராத் கூறியதாவது:இந்த ஏரியில் உள்ள தண்ணீரில் உப்பின் அளவு மிகவும் அதிகம். மேலும், தற்போது அதிக அளவில் பாசியும் உள்ளது. மூன்றடி ஆழத்துக்கு கீழ், தண்ணீரில், ஆக்சிஜன் இருக்காது. தற்போது ஏரியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. அதனால், உப்பின் அளவு அதிகரித்து, பாசியுடன் சேர்ந்து, நீரின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியிருக்கலாம்.ஏரியில் நீரின் நிறம் மாறுவது இது முதல்முறையல்ல. மேற்காசிய நாடான ஈரானிலும் இது போன்ற உப்பு நீர் ஏரியில் உள்ள தண்ணீர் நிறம் மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

'இது மனிதர்களால் ஏற்பட்ட மாற்றம் அல்ல. தற்போது ஊரடங்கு உள்ளதால், எந்த இடைஞ்சலும் இல்லாததால், நீரின் நிறம் மாறியிருக்கலாம். 'புவியியல் ரீதியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, அதனால் இந்த நிற மாற்றம் உருவானதா என்பது குறித்து ஆராய உள்ளோம்' என, அவுரங்காபாதில் உள்ள டாக்டர் பாலாசாஹேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலையின் புவியியல் துறை தலைவர், டாக்டர் மதன் சூர்யன்சி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-202021:19:23 IST Report Abuse
ESSEN I fully support the first remarks.I have observed pink water in between Ambur and Jolarpettai while travelling by train to Bengaluru.The same was due to effluents discharged from tanneries.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
12-ஜூன்-202015:44:11 IST Report Abuse
Loganathaiyyan விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது???அப்போ அவர்கள் எல்லாம் பணம் கொடுத்தது விஞ்ஞானிகளானவர்களா என்ன???இதற்கு DIFFUSION என்று பெயர். பக்கத்தில் 1 கிலோ மீட்டர் தூரம் கூட இருக்கலாம் 1) சாயத்தொழில் நடக்கிறதா 2) ரசாயன தொழிற்சாலை இருக்கின்றதா 3) அந்த நிலத்தின் வெகு ஆழத்தில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் இருக்கின்றதா 1,2ல் கழிவு நிலத்தில் கலந்து அதிலிருந்து இந்த அரிக்கு வந்திருக்கும். கச்சா எண்ணெய் கீழிருக்கும் வாயுவிலிருந்து பீறிட்டுக்கொண்டு மேலே சிறிது கசிந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X