பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவர் பூங்கா ஆக்கிரமிப்புஅகற்ற கலெக்டரிடம் மனு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் சிறுவர் பூங்கா ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

விழுப்புரம் முத்துவேல் லே அவுட் பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:எங்கள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொது பயன்பாடு மற்றும் விளையாட்டு மைதானமாக இருந்தது. இது நகராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்டு சிறுவர் பூங்கா மற்றும் விளையாடுமிடம் என நகராட்சி மூலம் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இடம் முற்றிலும் தனியாரால், நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து சென்னை ஐகோர்ட்டில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

எனவே, சிறுவர் பூங்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X