பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கனந்தலில் வீடிழந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : வடக்கனந்தல் எல்.எப்., சாலையில் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் அங்கு வசித்தவர்கள், மாற்று இடம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் எல்.எப்., சாலையில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டியுள்ள நாங்கள் அனைவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்.ஆனால் அந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது எனக்கூறி, எங்கள் குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து அகற்றி விட்டனர்.

தற்போது நாங்கள் அனைவரும் குடியிருக்க இடம் இன்றி தவித்து வருகிறோம். எனவே வீடிழந்த எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X