ஊரடங்கு உத்தரவால் முடங்கிய விநாயகர் சிலை தயாரிப்பு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவால் முடங்கிய விநாயகர் சிலை தயாரிப்பு பணி

Added : ஜூன் 11, 2020
Share

விழுப்புரம் : கொரோனா ஊரடங்கு உத்தரவால், விழுப்புரம் அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் முடங்கியுள்ளது.

விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டில் ஏராளமான தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் அடுத்த இரண்டு மாதங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி துவங்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 10 மாதங்கள் சிலை தயாரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான சிலை தயாரிப்பு பணி துவங்கி நடந்து வந்த நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் முடங்கிப்போனது.இதனால், அய்யங்கோவில்பட்டில் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X