பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் நேற்று பொறுப்பேற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர், ரிஷிவந்தியத்தில் அரசு கல்லுாரி அமைக்கப்படும் என தெரிவித்தார். இதையொட்டி தற்காலிகமாக அரியலுார் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, கல்லுாரிக்கென 7 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்த சண்முகம், ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வராக நேற்று பொறுப்பேற்றார்.

திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பொருளாதாரம், புள்ளியியல், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய துறைகள் வரும் கல்வியாண்டு முதல் செயல்பட உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கல்லுாரி முதல்வர் சண்முகம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X