பொது செய்தி

தமிழ்நாடு

'டோக்கன்' முறையில் பருத்தி ஏலம்: கொரோனா ஊரடங்கு எதிரொலி

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
 'டோக்கன்' முறையில் பருத்தி ஏலம்: கொரோனா ஊரடங்கு எதிரொலி

திருப்பூர்;கொரோனா ஊரடங்கு தொடர்வதால், மூலனுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பருத்தி ஏலம் டோக்கன் முறையில் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு, மூலனுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் துவங்கியுள்ளது. மேற்கு மண்டலத்தில், அதிக அளவு பருத்தி ஏலம் நடப்பது மூலனுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம். வரும், 18ம் தேதி முதல், ஒவ்வொரு வியாழக்கிழமையும் பருத்தி ஏலம் நடக்கிறது.கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பருத்தி ஏலம் நடத்த, கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாரம் தோறும், 1000 விவசாயிகள் பங்கேற்கும் நிலையில், 250 பேர் மட்டும் வர வேண்டுமென முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக, 'டோக்கன்' முறையில், 250 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். எனவே, விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பருத்தி விவசாயிகள், 86675 43113 என்ற எண்களில், பெயர், ஊர், மூட்டைகள் எண்ணிக்கை, தொலைபேசி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை மட்டுமே அலுவலகம் இயங்கும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X