நொய்யல் ஆற்றில் ஓடிய சாயக்கழிவு| Dinamalar

நொய்யல் ஆற்றில் ஓடிய சாயக்கழிவு

Added : ஜூன் 11, 2020
Share
திருப்பூர்:தொழில்துறை இயல்புக்கு திரும்பும்நிலையில், திருப்பூர் நொய்யலாற்றில் நேற்று, சாயக்கழிவுநீர் கலந்தோடியது.மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத சாய ஆலைகள், அனுமதி பெற்ற ஆலைகளிலும் சில, அவ்வப்போது சுத்திகரிக்காத சாயநீரை திறந்துவிட்டு, நீர்நிலைகளை பாழ்படுத்துகின்றன. ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், சாய ஆலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் இயக்கத்தை

திருப்பூர்:தொழில்துறை இயல்புக்கு திரும்பும்நிலையில், திருப்பூர் நொய்யலாற்றில் நேற்று, சாயக்கழிவுநீர் கலந்தோடியது.மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத சாய ஆலைகள், அனுமதி பெற்ற ஆலைகளிலும் சில, அவ்வப்போது சுத்திகரிக்காத சாயநீரை திறந்துவிட்டு, நீர்நிலைகளை பாழ்படுத்துகின்றன. ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், சாய ஆலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் இயக்கத்தை நிறுத்தியிருந்தன.அதனால், நொய்யலாறு, நல்லாறு, சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும், சாயக்கலப்பு இன்றி ஓடின. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், சாய ஆலைகள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.இதனால், நொய்யலில், மீண்டும் சாயம் கலக்கத்துவங்கியுள்ளது. நடராஜா தியேட்டர் அருகே, நொய்யலாற்றில், நேற்று காலை, சிவப்பு, நீல நிறங்களில் சாயக்கழிவுநீர் கலந்தோடியது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆற்றுநீருடன் சாயநீர் கலந்தோடியது, இயற்கை ஆர்வலர்களை கவலை அடையச்செய்துள்ளது.நீர் நிலையில் சாயக்கழிவை திறந்துவிடுவோரை மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X