பொது செய்தி

தமிழ்நாடு

'காரீப்' பயிருக்கு காப்பீடு வேளாண் துறை அழைப்பு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:காரீப் பருவ பயிர்களுக்கு, பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என, வேளாண் துறை அழைப்பு விடுத்து உள்ளது.பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தில், புதிய மாற்றம் செய்து, விவசாயிகளின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், நடப்பு ஆண்டுக்கான அடங்கலை பெற்று, பொது 'இ-சேவை' மையங்களில், தவணைத்தொகையை செலுத்தி, காப்பீட்டில் இணையலாம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு சங்கங்களிலும் பதிவு செய்யலாம். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பெறாத விவசாயி கள் அனைவரும், இத்திட்டத்தில் இணையலாம். திருப்பூர் மாவட்டத்தில், மக்காச்சோளம், சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் மற்றும் பருத்தி பயிர்களுக்கு, ஆக., 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.வெங்காயம், மஞ்சள், தக்காளி பயிர்களுக்கு, ஜூலை 31ம் தேதிக்குள்ளும், வாழை, மரவள்ளி பயிர்களுக்கு, ஆக., 31ம் தேதிக்குள்ளும் பதிவு செய்துகொள்ளலாம். காரீப் பருவத்துக்கான பயிர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X