பொது செய்தி

தமிழ்நாடு

சரிவு! விவசாய கிணறுகளில் நீர் மட்டம்...ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
 சரிவு! விவசாய கிணறுகளில் நீர் மட்டம்...ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதுடன், விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருவதால் கிணறுகளை ஆழப்படுத்தும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கச்சிராயபாளையம் சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் மூலம் 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் கோமுகி ஆறு மற்றும் இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகளை நீர் ஆதாரமாகக் கொண்டு அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு தோட்ட பயிர்களையும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

சம்பா, நவரை, கார் அல்லது சொர்ணவாரி ஆகிய பருவங்களில் இங்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது.கோமுகி அணை மற்றும் இப்பகுதியில் உள்ள ஏரிகளின் நீரை பயன்படுத்தி இப்பகுதியில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் வறண்ட பிறகு விவசாய கிணறுகளின் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு பருவ மழை போக்கு காட்டியதால் மழை அளவு குறைந்து கோமுகி அணை மற்றும் இங்குள்ள ஏரிகளில் நீர் நிரம்ப தாமதம் ஏற்பட்டதுடன் நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் நிரம்பியது. மேலும் பல ஏரிகள் நீர் வரத்து இன்றி வற்றிய நிலையில் இருந்தது.

கோமுகி அணை மற்றும் ஏரிகளில் நிரம்பிய குறைந்த அளவு நீரைக் கொண்டு சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் முடித்தனர். தொடர்ந்து, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்து வந்த நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய கிணறுகளின் மூலம் நவரை பருவ சாகுபடியை துவங்கி அதன் அறுவடை பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. கோமுகி அணை, ஆறு மற்றும் இப்பகுதியில் உள்ள ஏரிகள் தற்போது நீர் வற்றி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் இதனை ஆதரமாகக் கொண்டுள்ள விவசாய கிணறுகளிலும் நீர் மட்டமும் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.இதனால் இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு சாகுபடி செய்த பயிர்கள் கருகத் துவங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X