அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தஞ்சை பணியாளர்களை அழைக்கக் கூடாது

Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தஞ்சாவூர்; 'சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக, தஞ்சாவூர் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்லக் கூடாது' என, தஞ்சை, தி.மு.க., - எம்.எல்.ஏ., நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர்களுக்கு, எம்.எல்.ஏ., நீலமேகம் நேற்று அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 125 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சுகாதார ஆய்வாளர்கள், துாய்மைப் பணியாளர்களை சென்னைக்கு பணிக்கு அனுப்ப, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் மூலம், பலர் தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருப்பதால், தஞ்சாவூரில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டிஉள்ளது.இந்நிலையில், தஞ்சாவூரில் பணியாற்றுபவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றால், தஞ்சாவூரில் சுகாதாரப் பணிகள் முடங்கும். இதனால், அதிகளவில் கொரோனா தொற்று பரவும். எனவே, மாநகராட்சி பணியாளர்களை, தஞ்சாவூரிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-ஜூன்-202016:31:51 IST Report Abuse
Baskar தஞ்சையில் உள்ள சுகாதார பணியாளர்களை அழைக்கக்கூடாது என்று ஒரு தி.மு.க எம்.எல் எ சொல்கிறார். இவனை போன்ற மக்களுக்கு உதவாதவங்களை என்னவென்று சொல்வது. இதில் வேறு இவனது தலைவன் எல்லோரும் மக்கள் பணியாற்றவும் ஒன்றிணைவோம் வா என்று கூப்பிடுகிறான். இந்த நீலமேகம் போன்றவர்களால் தான் தமிழகம் இருந்து கொண்டே வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X