வாழையில் நுனி அழுகல் நோய்| Dinamalar

வாழையில் நுனி அழுகல் நோய்

Added : ஜூன் 11, 2020
Share
 வாழையில் நுனி அழுகல் நோய்

அவிநாசி:'பராமரிப்பு இல்லாத வாழைத் தோட்டங்களில், சிகார் நுனி அழுகல் நோய் தாக்கும்' என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா மற்றும் மண்ணியல் துறை வல்லுனர் தனசேகர பாண்டியன் கூறியதாவது;வாழையில் நுனி கருகல் நோய், முதலில் பூவிதழ் வட்டத்தை தாக்கி, பின் காய்களின் தோல் கருமை நிறமாக மாற்றி திசுக்களை சுருங்கவும், மடங்கவும் செய்வதால், காய் சிறுத்து விடுகிறது. சில நேரங்களில், இந்த அழுகல் பகுதி ஈரத்துடன் இல்லாமல், சதைப்பகுதி கடினமாகவும் காய்ந்தும் நார் நாராகவும் இருக்கும். பூஞ்சானங்களின் வித்து தாங்கி மற்றும் சாம்பல் நிறமுடைய வித்துகள், காய்களின் நுனியை மூடியிருப்பதாலும், இது சிகரெட்டின் நுனிப்பகுதியில் உள்ள சாம்பல் போன்று காட்சியளிக்கும்.மித வெப்பமும், ஈரப்பதம் அதிகமாகவும் உள்ள சூழ்நிலையில் இந்நோய் வர வாய்ப்புள்ளது. பராமரிப்பு மிக மோசமாக உள்ள வாழைத் தோட்டங்களில் இந்நோய் வேகமாக பரவும்.இவற்றை கட்டுப்படுத்த, பூ வெளிவந்து, காய்கள் உருவாகியவுடன், அதற்கு சரியான ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கச் செய்ய, காய்களின் நுனியில் ஒட்டியுள்ள பூக்களை அகற்ற வேண்டும். மரங்களுக்குள், போதிய இடைவெளி இருக்க வேண்டும். சரியான வடிகால் வசதி, நோய் தாக்கத்தை குறைக்கும். குலை தள்ளுவதற்கு முன்பே, பாலிதின் பைகளைக் கொண்டு நடுத்தண்டு கொண்னையினை மூடி வைக்கலாம்.காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25 சதவீதத்துடன், ஒட்டுத்திரவம், 0.5 - 1.0 மி.லி., கலந்து குலைகளின் மீது தெளிக்க வேண்டும். பூவிதழ் மீது, 0.1 சதவீதம் கார்பன்டஸிம் அல்லது டயத்தேன் எம்- 45, 0.1 சதவீதம் தெளிக்க வேண்டும்.பூ வெளிவந்து, காய்கள் உருவானவுடன், காய் நுனியில் ஒட்டியுள்ள, பூக்களை அகற்ற வேண்டும். குலை தள்ளிய, 8 முதல் 11 நாட்கள் கழித்து பூக்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X