பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த மாங்குரோவ் காடுகள்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
 சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த மாங்குரோவ் காடுகள்

சேதுக்கரை:திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில்கடலும் ஆறும் சங்கமிக்கும் கழிமுகத்துவாரம் உள்ளது.

உத்தரகோசமங்கை பகுதியில் இருந்து ஆனைகுடி, மோர்க்குளம் வழியாகவரும் கொட்டகுடி ஆற்றின் வெள்ள நீர் சேதுக்கரை கழிமுகத்துவாரத்தில்கலக்கிறது. கோரைக்குட்டம் கிராமத்திற்கு செல்ல 120 மீ., நீளத்திற்குதும்பு தரைப்பாலம் கடந்த 2005ல் அமைக்கப்பட்டுள்ளது.

கழிமுகத்துவாரத்தை சுற்றி இருபுறங்களிலும் ஏராளமான மாங்குரோவ் காடுகள் அடர்ந்து வளர்ந்திருப்பது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாங்குரோவ் மரங்களின் வேர்கள்வெளியே குச்சிகளாக நீட்டிக்கொண்டு காற்றை சுவாசிக்கின்றன.

இங்கு பருவ மழைகாலங்களிலும், கோடை காலங்களிலும் ஏராளமான பறவைகள்இரைக்காக தஞ்சம் அடைகின்றன. சுற்றுலாத்துறையினர் கூடுதல் மாங்குரோவ் காடுகளை வளர்த்திடவும், பொழுதுபோக்கிற்கான சிறு படகு போக்குவரத்தை ஏற்படுத்திட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X