பரமக்குடியில் இன்டர்நெட் முடக்கம்: திணறும் அரசுத்துறை அதிகாரிகள்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடியில் தொடர்ந்து 3 மாதங்களாக பி.எஸ்.என்.எல்., டவர் செயல்பாடு இன்றி இன்டர்நெட் முடங்கியுள்ளது. அரசு துறைகள் உட்பட வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பரமக்குடியில் ஆற்றுப்பாலம், பெரிய பஜார், கிருஷ்ணா தியேட்டர் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 6க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன.இதன் மூலம் தபால் நிலையம், தாலுகா அலுவலகம், ரிஜிஸ்டர் ஆபீஸ், இ--சேவை மையங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள்தங்களது இன்டர்நெட் சேவையை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்றுப்பாலம் அருகிலுள்ள டவர் பல மாதங்களாக செயல்பாடு இன்றி இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இன்டர்நெட் சேவை தொடங்கி, அலை பேசி அழைப்புகளை ஏற்க முடியாமல் உள்ளது.முக்கியமாக அரசுத் துறைகள் பலவும், ஆற்றுப்பாலம் டவரில் இருந்து செயல்படுவது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித பயனும் இல்லை என பரமக்குடி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் பலரும் இன்டர்நெட் பயன்படுத்தி வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற கூறியுள்ளனர். மேலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பரமக்குடியில் உள்ள டவர்களை சீரமைத்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களை தக்கவைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X