'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனம் மிரட்டல்: பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா ஊரடங்கையும் நினைத்து பார்க்காமல், அதிக வட்டி கேட்டு குறு நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.கூட்டுறவு சங்கங்களில், நிர்வாகக்குழுவினர் மட்டுமே பயன்பெறுகின்றனர். நிதி உதவி கிடைக்காமல் தவிக்கும் பெண்களை, 'மைக்ரோ' பைனான்ஸ் நிறுவனங்கள் குறிவைக்கின்றன.குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி, அனைத்து வகையான
 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனம் மிரட்டல்: பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்

திருப்பூர்:கொரோனா ஊரடங்கையும் நினைத்து பார்க்காமல், அதிக வட்டி கேட்டு குறு நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.கூட்டுறவு சங்கங்களில், நிர்வாகக்குழுவினர் மட்டுமே பயன்பெறுகின்றனர். நிதி உதவி கிடைக்காமல் தவிக்கும் பெண்களை, 'மைக்ரோ' பைனான்ஸ் நிறுவனங்கள் குறிவைக்கின்றன.
குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி, அனைத்து வகையான ஆவண நகல்களிலும், 100 கையெழுத்து வரை பெற்றுக்கொண்டு, கடன் வழங்குகின்றன. எவ்வகை கடன் தவணையாக இருந்தாலும், கொரோனா ஊரடங்கில், ஆறு மாதம் செலுத்த வேண்டியதில்லை என்பது அரசு அறிவிப்பு.மத்திய அரசின் அறிவிப்பை மதிக்காமல், கடன் பெற்ற மகளிர் குழுவினரை, 'மைக்ரோ' பைனான்ஸ் நிறுவனங்கள் மிரட்டுவது அதிகரித்துவிட்டது. மாத தவணை செலுத்தாவிட்டால், வட்டி மட்டும், 7,000 ரூபாய் வரை செலுத்த வேண்டுமென மிரட்டுவதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள், கலெக்டரை சந்தித்து, தங்களது பிரச்னைகளை எடுத்துக்கூறினர்.பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 'ஊரடங்கால், சாப்பாட்டிற்கே வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். அரசு, ஆறு மாதங்களுக்கு தவணை செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது.
நிதி நிறுவனங்கள், தவணை செலுத்தாவிட்டால், 7,000 ரூபாய் வட்டி செலுத்த வேண்டுமென மிரட்டுகின்றனர். கொரோனா ஊரடங்கை நினைத்து பார்த்து, வட்டி தள்ளுபடி சலுகை வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்' என்றனர்.நெருக்கடி கொடுக்காதீங்க!இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் கேட்டபோது,''வங்கிகள், 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், ஊரடங்கு காலத்தில், தவணை செலுத்த நெருக்கடி கொடுக்க கூடாது. மாவட்ட முதன்மை வங்கி மூலமாக, உரிய அறிவுரை வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X