சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் மகன் தகராறு: முதிய தம்பதி தற்கொலை

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

திருப்புவனம்; மகன், போதையில் தகராறு செய்ததால், முதிய தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர், குண்டுமலை, 78; மனைவி கருப்பி, 75. இவர்களுக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். மகள்களுக்கு திருமணமாகி, தனியே வசித்து வருகின்றனர்.மகன் பிச்சை மட்டும், பெற்றோருடன் வசித்து வருகிறார். பிச்சை அடிக்கடி போதையில், பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

விரக்தியடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டனர்.மற்றொரு சம்பவம்ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காந்தி நகர், ஓடைத்தோப்பு அருகே, முட்புதரில் நேற்று, முதிய தம்பதி இறந்து கிடந்தனர்.போலீசார் விசாரணையில், மதுரை மாவட்டம், பெத்துார் கிராமத்தைச் சேர்ந்த, கட்டில் கயிறு பின்னும் தொழிலாளி சுப்பிரமணி, 73; மனைவி சாந்தி, 64, என தெரிந்தது. கொரோனா ஊரடங்கால், தொழில் இல்லாத நிலையில், மண்டபம் வந்த தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X