மானாமதுரையில் பராமரிக்கப்படாத ஊழியர் குடியிருப்பு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஊழியர் குடியிருப்பு சேதமடைந்துள்ளதால் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உடைகுளம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இதில் 7க்கும் மேற்பட்ட குடியிருப்பு சேதமடைந்த காரணத்தால் அதில்
 மானாமதுரையில் பராமரிக்கப்படாத ஊழியர் குடியிருப்பு

மானாமதுரை:மானாமதுரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஊழியர் குடியிருப்பு சேதமடைந்துள்ளதால் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.

மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உடைகுளம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இதில் 7க்கும் மேற்பட்ட குடியிருப்பு சேதமடைந்த காரணத்தால் அதில் ஊழியர்கள் தங்குவதில்லை. இந்த கட்டடங்களை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினாலும், மின் விளக்குகள் எரியாத காரணத்தினாலும் இரவு நேரங்களில் அந்த குடியிருப்புகளில் சமூக விரோதச் செயல் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழியர்கள் குடியிருந்து வந்தனர்.அவர்கள் தங்கியிருக்கும் போதே கட்டடம் சேதமானது குறித்து அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் காலி செய்து விட்டனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X