பொது செய்தி

தமிழ்நாடு

சீசன் முடிந்தும் தேர்த்தங்கல்சரணாலயத்தில் தங்கிய பறவைகள்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement
 சீசன் முடிந்தும் தேர்த்தங்கல்சரணாலயத்தில் தங்கிய பறவைகள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேர்தங்கலில் மார்ச்சில் சீசன் முடிந்த பின்னரும்,தண்ணீர் உள்ளதால் வெளியூர் பறவைகள் குஞ்சுகளுடன் தங்கியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டும்தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வரும். குறிப்பாக கூழைக்கடா, செங்கால்நாரை, கரண்டிவாயன், மஞ்சள்மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கிஅதன்பின் இடம்பெயர்கின்றன.

இவ்வாண்டு ராமநாதபுரம் பகுதியில் மழை பெய்து கோடைகாலத்திலும் நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. குறிப்பாக தேர்த்தங்கள்பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. தற்போதும் பறவைகள் தங்கியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

வனரேஞ்சர் சதீஸ் கூறுகையில், 'தேர்த்தங்கல்பறவைகள் சரணாலயம் கடந்த ஆண்டு 3 லட்சம் செலவில் துார்வாரப்பட்டது. பெரும்பாலான பறவைகள் சென்று விட்டன.தற்போது தண்ணீர் உள்ளதால் சிலபறவைகள் தங்கியுள்ளன. மீண்டும் அடுத்த ஆண்டுதுார்வாரி சரணாலயத்தை மேம்படுத்த உள்ளோம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X