பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பாக இணையதளங்களை கையாளும் முறை: மனித வள மேம்பாட்டுத்துறை புத்தகம் வெளியீடு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

உடுமலை:மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில், பாதுகாப்பான முறையில் இணையதளங்களை கையாளுவது குறித்து, புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.'கொரோனா' பாதிப்புகளை கட்டுப்படுத்த, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக, தனியார் நிறுவனங்கள் பலவும் இணையதள வழி மூலம் வீட்டிலிருந்து பணிசெய்து வருகின்றனர்.
புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை, பல பள்ளிகளும் இணைய வழி மூலம் நடத்தி வருகின்றன. மேலும், பட்டிமன்றம், பொருளாதாரம், கொரோனா பாதிப்பு, மாணவர்களின் மனநிலை என இணையதள செயலி மூலம் பலவிதமான உரையாடல்களும் இந்த காலத்தில் அதிகரித்துள்ளன.அதுதவிர, கல்வி இணையவழி படிப்புகள், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் என, வீட்டிலிருக்கும், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் பணிபுரிவோர் என அனைவரையும் தற்போது இணையம் வழிநடத்தி வருகிறது.'சைபர் செக்யூரிட்டி' எனப்படும் இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், தகவல் திருட்டு, தேவையில்லாத செயலிகள், மொபைல் மற்றும் லேப்டாப்களில் பதிவாகி விடுவது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவது, நாட்டில் 12 முதல், 29 வயதுக்குள்ளானவர்களாக உள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான இணைய குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
இவற்றிலிருந்து, இவர்களை பாதுகாக்க, பெற்றோர் வழிநடத்த வேண்டும் எனவும், இணையம் குறித்த விழிப்புணர்வு வேண்டும் எனவும் மனித வள மேம்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், இணையத்தை பாதுகாப்பான முறையில் கையாளுவது குறித்தும், அதில் எந்தெந்த விதமான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது என்பதையும், குறிப்பிட்டு, புத்தகம் வெளியாகியுள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் இதுகுறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X