பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியாச்சு! விரைவில் 'ரிசல்ட்' வெளியாகும் வாய்ப்பு

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

உடுமலை:பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், முடிவுகள் விரைவில் வெளியாகும் என, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதி பள்ளிகளில் மட்டுமே விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன.
கொரோனா பாதிப்புகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்கான துணை மையம் ஆர்.ஜி.எம்., பள்ளியில் அமைக்கப்பட்டது.விடைத்தாள்கள், கடந்த 27 ம்தேதி முதல் திருத்தப்படுகின்றன. உடுமலை கல்வி மாவட்ட ஆசிரியர்கள், 368 பேர், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.வழங்கப்பட்ட விடைத்தாள்களுடன் கூடுதலாக, சென்னை சுற்றுப்பகுதி பள்ளிகளின் விடைத்தாள்களும், மற்ற மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மையங்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இதனால், நிர்ணயிக்கப்பட்டதுடன் கூடுதல் நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது.பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனால், சில தினங்களில் ஆன்லைனில் மதிப்பெண்கள் தேர்ச்சி முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் துவங்குவதாக தேர்வுத்துறையும் தெரிவித்துள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள்தான் நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுதுறை, ஆன்லைன் பதிவுகளுக்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X