டூவீலர்களில் ராட்சத சைலன்ஸர்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் டூவீலர்களில் மாற்றம் செய்யப்பட்ட சைலன்ஸர்களை சிலர் பயன்படுத்துவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைசேர்ந்தவர்கள் மதுரை சென்றுவரவும், பொருட்கள் வாங்கி வரவும் டூவீலர்களை நம்பியே உள்ளனர். இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் விதவிதமான டூவீலர்களை பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக இளைஞர்களிடையே அதிக சப்தம் எழுப்பும் சைலன்சர் கொண்ட டூவீலர்களை ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெருக்கடி மிகுந்த திருப்புவனம் நகரில் அதிவேகத்தில் சைலன்சரில் அதிக சப்தத்துடன் இளைஞர்கள் வலம் வருவதால் மக்கள் அலறியடித்து ஓட வேண்டியுள்ளது. மருத்துவமனைகள், மார்க்கெட் வீதிகள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் திடீரென அதிக சப்தத்துடன் டூவீலர்களில் பறக்கின்றனர். மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்களை டூவீலரில் பொறுத்தக்கூடாது என்ற விதியை மீறி செயல்படும் இவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X