பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதியளிப்பு திட்டம்; பயனாளிகள் வீடு தேடி ஊதியம்

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

ஆனைமலை;தமிழகம் முழுவதிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:அரசின் உத்தரவுப்படி, கொரோனா தொற்று அதிகம் இல்லாத, 25 மாவட்டங்களில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில், நுாறு சதவீதம் பயனாளிகளை கொண்டு பணிகள் நடக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள, 11 மாவட்டங்களில், 50 சதவீத பயனாளிகளை பயன்படுத்தி மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.
பயனாளிகளுக்கு இதுவரை, வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஊரடங்கால் பஸ்சில் வங்கிகளுக்கு செல்ல முடியாமல் பயனாளிகள் சிரமப்படுகின்றனர். மேலும், கூட்டமாக வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பதாலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.இதனால், பயனாளிகள் நலன் கருதி, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியத்தை, வீட்டுக்கே சென்று வழங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில், வங்கி முகவர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X