திருமலைக்கு பஸ்கள் இயக்க கோரிக்கை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை, மேலுார் கிளைகளில் இருந்து அழகமாநகரி, திருமலை, கட்டாணிபட்டி ஊராட்சிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

சிவகங்கை மற்றும் மேலுார் கிளைகளில் இருந்து தினமும் 4 முறை அரசு பஸ்கள் இயக்கப் பட்டன. குறிப்பாக அழகமாநகரி, திருமலை, கட்டாணிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகள், ஊழியர்கள், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு சிவகங்கைக்கும், மேலுார் வழியாக மதுரைக்கும் சென்றுவர இந்த பஸ்கள் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக சிவகங்கை, மேலுாரில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட வில்லை. சிவகங்கை கிளையில் இருந்து ஒரு முறை மட்டுமே பஸ் வந்து செல்கிறது. மேலுார் கிளையில் இருந்து பஸ்களே இயக்கவில்லை. இதனால், கிராமத்தினர், விவசாயிகள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர். எனவே, சிவகங்கை, மேலுாரில் இருந்து டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X