பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் புலிக்குளம் மாடுகள்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 வெளிமாவட்டங்களுக்கு செல்லும் புலிக்குளம் மாடுகள்

மானாமதுரை:மானாமதுரை அருகே வயல்களுக்கு இயற்கை உரமாக புலிக்குளம் மாடுகளின் சாணம் பயன்படுவதால் அந்த மாடுகளை கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகள் இயற்கையிலேயே வறட்சியை தாங்கி வளரக்கூடிய மாட்டினங்களில் ஒன்று.இந்த வகை மாடுகள் தமிழகம் முழுவதும் கிடை மாடுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிவகங்கை, விருதுநகர், மாவடங்களில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டிற்கு இந்த மாடுகளின் கன்றுகளையே பழக்கப்படுத்தி ஜல்லிக்கட்டு காளைகளாக வளர்த்து வருகின்றனர்.இந்த மாடுகளின் சிறுநீர் மற்றும் சாணம் இயற்கை உரமாக பயன் படுவதால் இந்த மாடுகளை கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த மாடுகளை வளர்த்து வருபவர்கள் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களுக்கு கிடை அமைக்க அழைத்து சென்று வருகின்றனர்.

மாடுகளின் உரிமையாளர் கணேசன் கூறுகையில், தற்போது ஒரு நாள் இரவு கிடை அமைக்க ரூ.2ஆயிரத்திலிருந்து ரூ.2,500 வரை வாங்குகின்றோம்.இவற்றின் சாணம் மற்றும் சிறுநீர் நல்ல இயற்கை உரமாக இருப்பதினால் கிடை அமைக்க விவசாயிகள் போட்டி, போட்டு எங்களை அழைக்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X