சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்விளையாட்டு அரங்கம், கடைகளுக்கு 'சீல்': வருவாய்துறையினர் அதிரடி நடவடிக்கை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 உள்விளையாட்டு அரங்கம், கடைகளுக்கு 'சீல்': வருவாய்துறையினர் அதிரடி நடவடிக்கை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மூன்று உள்விளையாட்டு அரங்கம் மற்றும் இரண்டு கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்றும்; ரோட்டில் முகக்கவசம் அணிந்து செல்கின்றனரா என, வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அதில், விதிமுறை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.அப்போது, ராசக்காபாளையம், சுப்பையா நகர், மாக்கினாம்பட்டி அருகே உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில், சிலர் அனுமதியின்றி விளையாடுவதை கண்டறிந்தனர். உடனடியாக அவர்களை வெளியேற்றி, அரங்கத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.இதுபோன்று, டீ குடிக்க மக்கள் கூட்டமாக நின்றதால், பேக்கரி மற்றும் டீ கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.பொள்ளாச்சியில் நேற்றுமுன்தினம் தாசில்தார் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், 21,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சப் - கலெக்டர் கூறியதாவது:அனுமதியின்றி செயல்பட்ட உள் விளையாட்டு அரங்கம் 'சீல்' வைக்கப்பட்டது. அதுபோன்று, தனியார் நிறுவனத்துக்கு அதிகளவு ஆட்களை அழைத்துச் சென்ற வாகனத்தை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.ஊரடங்கு உத்தரவு தளர்வு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மக்கள் பின்பற்ற வேண்டும்.கொரோனா கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X