ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் சஸ்பெண்ட்

Added : ஜூன் 12, 2020
Share

சிவகங்கை:திருப்புவனம் துாதை கிராமத்தில் ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்தது.

சிவகங்கை பறக்கும் படை தனி வட்டாட்சியர், திருப்புவனம் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, துாதை கிராம ரேஷன் கடையில் விற்பனையாளரான சங்கையா 21 மூடைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற போது பிடிபட்டார்.அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, விற்பனையாளர் சங்கையா தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X