சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார்த்திபனுார் அரசுப்பள்ளியில் பயமுறுத்தும் கட்டடங்கள்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 பார்த்திபனுார் அரசுப்பள்ளியில் பயமுறுத்தும் கட்டடங்கள்

பரமக்குடி:பார்த்திபனுார் அரசு மேல்நிலைப்பள்ளி முகப்பில் உள்ள கட்டடங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

விடுமுறை காலத்தில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நுழைவு வாயில் உடைந்து உள்ள நிலையில், அதன் இருபுறங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் உடையும் தருவாயில் ஆபத்தாக உள்ளது.

மேலும் சுற்றுச் சுவர் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உடைந்தும் உள்ளன.கொரோனா விடுமுறை நாட்களில் இதுபோன்ற உடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்தி மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X