அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலியான மா.செ., பதவிக்கு மல்லுக்கட்டும் நிர்வாகிகள்

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர், ஜெ.அன்பழகன்வகித்த பதவியை கைப்பற்ற, நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

ஜெ.அன்பழகனின் மறைவை தொடர்ந்து, தி.மு.க.,வில் மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்காலிகமாக, மாவட்ட பொறுப்பாளரை நியமிக்க, கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. போட்டி ஆரம்பம்சென்னை மாநகரில் உள்ள, முக்கிய பதவி என்பதால், மூன்று நாள் துக்கம் முடிந்ததும், மாவட்ட பொறுப்பாளரை நியமிக்கவேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, அதற்கான போட்டி ஆரம்பமாகி உள்ளது. இப்போட்டியில், ஐந்து பேர் இருப்பதாக, அறிவாலய வட்டாரம் கூறுகிறது.அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது:ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., - கு.க.செல்வம், சேப்பாக்கம் பகுதி செயலர் மதன்மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைராஜன், மாணவரணி துணை செயலர் மோகன் ஆகியோர் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றனர்.இதில், தனசேகரன், சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்; மேற்கு மாவட்டத்தைச் சேராதவர். ஆனாலும், அவர், மேற்கு மாவட்ட செயலர் பதவிக்கு காய் நகர்த்துகிறார். எதிர்பார்ப்புஒன்றுபட்ட தென் சென்னை மாவட்டமாக இருந்த போது, கிட்டு, மாவட்ட செயலராக இருந்தார். அவர் இறந்ததும், அப்பதவி, தனசேகரனுக்கு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்.

ஆனால், ஜெ.அன்பழகனுக்கு தான் கிடைத்தது. அப்போதே கிடைக்காத பதவி, இப்போது கிடைக்குமா என்பது தெரியவில்லை.சேப்பாக்கம் பகுதி தி.மு.க., செயலராக இருப்பவர், மதன்மோகன். இவர் தான், ஜெ.அன்பழகனுடன் இணைந்து பணியாற்றியவர். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி பணிகளை கவனித்து வந்தவர். மெரினாவில் உள்ள, கருணாநிதி நினைவிடத்தை தினமும் அலங்கரிக்கும் பணியில், எம்.எல்.ஏ., சேகர்பாபுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், மாநகராட்சி அனுமதி இல்லாமல், ஜெயலலிதா சிலை வைக்க, அ.தி.மு.க.,வினர் முயன்றபோது, மக்களை திரட்டி தடுத்து நிறுத்தியதற்காக, தலைமையின் பாராட்டை பெற்றவர்.

மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் முழு ஆதரவு இருப்பதால், நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார்.தி.மு.க., மாணவரணியில், 15 ஆண்டுகளாக, துணை அமைப்பாளர் பதவி வகித்து வரும் மோகன், கோடம்பாக்கத்தில் வசித்து வருவதால், அவரும், மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்.அ.ம.மு.க.,விலிருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்த, முன்னாள் எம்.எல்.ஏ., கலைராஜனும், தனக்கு தான் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறார்.இவ்வாறு, அறிவாலய வட்டாரம் கூறுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-ஜூன்-202002:03:47 IST Report Abuse
Baskar தி.மு.க.வில் ஒரு பழக்கம் உண்டு. அன்னான் எப்போது மண்டையை போடுவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருப்பார்கள். அன்பு அன்பழகன் புதையுண்டு இரு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பதவி சண்டை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X