பொது செய்தி

தமிழ்நாடு

வட மாவட்டங்களில் இன்று மழை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சென்னை; வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மத்திய மேற்கு, வடமேற்கு வங்க கடல், ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதியை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக, வங்க கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்களை பொறுத்தவரை, மேற்கண்ட பகுதிகளில், வரும், 15ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் .

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், இன்று லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்யும்.சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.நேற்றைய நிலவரப்படி, கரூரில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. வால்பாறை, கீழ் கோதையார், 3; சின்னக்கல்லார், அன்னுார், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X