தெருவில் தேங்கிய கழிவு நீரில்  உற்பத்தியாகும் கொசுக்கள்: குறிஞ்சி நகர் மக்கள் குமுறல்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 தெருவில் தேங்கிய கழிவு நீரில்   உற்பத்தியாகும் கொசுக்கள்: குறிஞ்சி நகர் மக்கள் குமுறல்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை குறிஞ்சி நகரில் வாறுகாலின்றி கழிவு நீர் தெருவில் குளம் போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக உள்ளது. கடும் துர்நாற்றத்தால் மக்கள் பரிதவிக்கின்றனர்.

நகராட்சி 28 வது வார்டை சேர்ந்த குறிஞ்சி நகரில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வாறுகால் தான் இங்குள்ள தலையாய பிரச்சனை. தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. குறிஞ்சி நகர் 2 வது மெயின் தெருவில் கழிவு நீர் தேங்குவதால் நடக்கக்கூட வழியில்லை. இங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. தரமற்ற வாறுகால் அமைத்ததால் அனைத்தும் இடிந்து விட்டன. கழிவு நீர் வெளியேற முடியாமல் தெருக்களில் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் எடுக்கிறது.



கராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர். நகராட்சி சார்பில் சப்ளை செய்யப்படும் குடிநீர் எந்த நேரத்தில் வரும் என தெரியாததால் குடிநீர் பிடிக்க முடியாமல் போய் விடுவதாக பெண்கள் குமுறுகின்றனர். மெயின் தெருவில் ரூ. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு சேதமடைந்து மேடும் பள்ளமுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.



பகலில் குடிநீர் வினியோகம்



குறிஞ்சி நகருக்கு நகராட்சி குடிநீர் எப்போது வரும் தெரியாது. திடீரென நள்ளிரவில் வினியோகம் செய்வர். துாக்கம் விழித்து குடிநீர் பிடிக்க வந்தால் நின்று விடும். எனவே பெண்கள் நலன் கருதி பகலில் குடிநீர் வினியோகிக்க வேண்டும். குடிநீர்

வினியோகம் ஒரு மணி நேரத்திற்குள் முடிந்து விடும். இதனால் குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும் பயனில்லை.


ஞானசவுந்தரி, குடும்ப தலைவி



தரமற்ற வாறுகால்



இப்பகுதியில் அமைக்கப்பட்ட வாறுகால், பேவர் பிளாக் ரோடு தரமாக இல்லாததால் சில நாட்களிலேயே பல்லிளித்து முற்றிலும் சேதமடைந்து விட்டது. கழிவு நீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. கன ரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக ஆகி விட்டது. டூவீலரில் கூட செல்ல முடியவில்லை.


பாலமுருகன், குடியிருப்போர் சங்க செயலர்.



கொசு தொல்லை



வாறுகால்கள் சேதமடைந்து விட்டதால் தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. பகலிலும், இரவிலும் கொசுக்கடி தாங்க முடியவில்லை. குழந்தைகள் வைத்திருப்போர் கொசுக் கடியினால் பாதிப்படைகின்றனர். கொசுவை ஒழிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் குடிநீர் விநியோகிக்க வேண்டும்.


சுப்பிரமணி, நெசவாளர்



நடவடிக்கை எடுக்கப்படும்



குறிஞ்சி நகரில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படும். வாறுகால்களின் அடைப்புகள் எடுக்கப்பட்டு கழிவு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கொசுக்களை கட்டுப்படுத்த குறிஞ்சி நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்படும்,


சரவணன், சுகாதார ஆய்வாளர்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X