சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஈ' தொல்லையால் முற்றுகை போராட்டம்! தனியார் பண்ணையை கண்டித்து ஆவேசம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 'ஈ' தொல்லையால் முற்றுகை போராட்டம்! தனியார் பண்ணையை கண்டித்து ஆவேசம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே ஈக்கள் தொல்லையால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், தனியார் கோழிப் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சிக்குட்பட்ட, ராஜாவூரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, விவசாயம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.அங்குள்ள விளைநிலங்களுக்கு மத்தியில், தனியார் கோழிப்பண்ணை உள்ளது. முட்டை உற்பத்தி செய்யும் இந்தப் பண்ணையில் வெளியேற்றப்படும் கழிவுகளிலிருந்து ஈக்கள் உருவாகி மக்களை பாதித்தது.இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று அந்தப் பண்ணை முன், முற்றுகையிட்டனர்.கிராம மக்கள் கூறியதாவது: கோழிப்பண்ணை கழிவுகள் மற்றும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்தாமல் விதிமுறைக்கு புறம்பாக பண்ணையின் உட்பகுதியில் தேக்குகின்றனர்.இதிலிருந்து லட்சக்கணக்கான ஈக்கள் உற்பத்தியாகிறது. இந்த ஈக்கள் விளைநிலங்கள், தோட்டத்து சாளைகள் மற்றும் ராஜாவூர் கிராம வீடுகளிலும் குவியல் குவியலாக பறந்து பரவுகின்றன. ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் ஆயிரக்கணக்கானஈக்கள் புகுந்துகொள்கின்றன.உணவு, குடிநீரிலும் ஈக்கள் மொய்த்து கொள்கின்றன. கால்நடை தீவனத்தில் அடர்ந்து பரவி இருப்பதாலும், குடிநீருக்குள் இறந்து கிடைப்பதாலும் கால்நடைகள் உணவு உட்கொள்ள முடியாமல் தவிக்கின்றன.
இதனால், கால்நடைகளுக்கு உபாதைகள் ஏற்படுகிறது. மக்களும், வாந்தி, தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை; தொழிலாளர்கள் விவசாய வேலைக்கு வர மறுக்கின்றனர்.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார் சமரசம் பேசினர்.பண்ணை நிர்வாகத்தினர், 'இன்னும் ஒரு வாரத்தில் கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, ஈக்கள் பரவாமல் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X