பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் கலைஞர் செல்லப்பா மறைவு

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 சமையல் கலைஞர் செல்லப்பா மறைவு

சென்னை; பிரபல சமையல் கலைஞரான செல்லப்பா, 66, கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் இரவு காலமானார்.சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் செல்லப்பா; சமையல் கலைஞர். இவர் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சமையல் செய்வதில் கைதேர்ந்தவர். ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு சமையல் செய்து கொடுத்த பெருமைக்குரியவர்.

இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, கொரோனா பாதிப்பு உறுதியானது. டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து, தமிழ்நாடு சமையல் கலைஞர் சங்க பொதுச்செயலர், இனியவன் கூறியதாவது:செல்லப்பா தன் உடல்நிலையை பற்றி கவலை கொள்ளாமல், எந்நேரமும் தொழிலிலேயே கவனமாக இருந்தார். சமீப காலமாக, பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். அவர் இறந்த செய்தி, பெரும் அதிர்ச்சியான ஒன்று. கொரோனா குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் இன்னும் அதிகம் தேவை. மக்களிடையே ஏற்பட்டுள்ள பயத்தை, அரசு போக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
14-ஜூன்-202013:00:01 IST Report Abuse
Covaxin இந்த செய்தி வேறெந்த ஊடகங்களிலும் வர வாய்ப்பில்லை... தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
13-ஜூன்-202007:17:32 IST Report Abuse
Nathan அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உடல் நலம் பாதிக்கப் பட்டவர்களும் கோரோநாவால் எளிதில் பற்றப் படுகிறார்கள் என்ற எச்சரிக்கையை கடை பிடிப்பது மிக மிக அவசியம். இது நம்ம மனா உறுதி, கொரோனா வராது என்னும் அசட்டு விளையாட்டு வேண்டாம்.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
13-ஜூன்-202003:46:30 IST Report Abuse
Natarajan Ramasamy சிறந்த சமையல் கலாய் வல்லுநர் பற்றி புகைப்படத்துடன் பிரசுரத்த தினமலருக்கு நன்றி. ஆயிரக்கணக்கான கல்யாணங்கள் சிறக்க உதவிய ,நல்ல மனம் உள்ளவர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X