பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய்களில் குடிமராமத்து பணி தீவிரம்:ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 கால்வாய்களில் குடிமராமத்து பணி தீவிரம்:ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன, கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பெரியணை, பள்ளிவளங்கால், வடக்கலுார் ஆகிய, ஐந்து கால்வாய்கள் மூலம் பாசன நீர் வழங்கப்படுகிறது.திட்டத்தில், இரண்டு போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடக்கிறது. ஒரு போகத்தில், 6,400 ஏக்கர் பாசனம் நடக்கிறது. நடப்பாண்டு முதல் போக சாகுபடிக்காக கடந்த, 7ம் தேதி பாசன நீர் திறக்கப்பட்டது. பாசன நீர் வழங்குவதற்கு முன் கடந்த மாதம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்காக பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் துவங்கப்பட்டன.இந்நிலையில், சில கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் இன்னமும் நிறைவடையாமல் உள்ளன. தற்போது, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடக்கிறது.விவசாயிகள் கூறியதாவது:காரப்பட்டி, பள்ளிவளங்கால் உள்பட அனைத்து கால்வாய்களிலும், 70 சதவீதம் வரையில் மட்டுமே, குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. நெல் நாற்றாங்கால் விடுவதற்காக தற்போது காரப்பட்டி, பள்ளிவளங்கால் கால்வாய்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு உள்ளது.நாற்றாங்கால் விட்டதும், கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தம் செய்து குடிமராமத்து பணிகள், நுாறு சதவீதம் முடிக்கப்படும். கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனைத்து கால்வாய்களிலும் குடிமராமத்து பணிகள் முடிக்கப்படும். பெரும்பாலான பகுதிகளில் கால்வாய்களுக்கு அருகே வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.இதனால், பொக்லைன் இயந்திரம் கொண்டு பணி செய்வதில் கடும் சிக்கல் நீடித்து, குடிமராமத்து பணிகள் தாமதமாகிறது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், விரைவில் ஆக்கிரமிப்பில் உள்ள வழித்தடங்களை மீட்க வேண்டும். அப்போது தான், ஆண்டுதோறும் பணிகள் விரைந்து முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X