கொரோனா தடுப்பு மையங்கள் மூடல்: அச்சத்தில் தொழிலாளர்கள்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

மூணாறு:மூணாறில் அரசு சார்பிலான கொரோனா தடுப்புமையங்கள் திடீரென மூடப்பட்டதால் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.

மூணாறில் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற போதும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் அரசு சார்பிலான தடுப்பு மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.அதற்கு சுற்றுலா துறைக்குச் சொந்தமான பட்ஜெட் ஓட்டல், பழைய மூணாறில் உள்ள கல்வி துறைக்குச் சொந்தமான கட்டடம் மற்றும் காலனி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகியவற்றில் வசதி செய்யப்பட்டது. மூணாறு ஊராட்சியினர் உணவு வழங்கினர்.

மூடல்: இந்நிலையில் அரசு உத்தரவுபடி கொரோனா தடுப்பு மையங்கள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது. அவற்றில் இருந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர் என்பதால் குடியிருப்புகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்பு இரண்டு அறைகளைக் கொண்ட வரிசை வீடுகள் என்பதால் தனிமை படுத்திக்கொள்வதில் சிக்கல் உள்ளது. அதனால் கொரோனா எளிதில் பரவ வாய்ப்புள்ளதால் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X