பாலம் பணி: வருஷநாடு துண்டிப்பு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

தேனி:மயிலாடும்பாறையில் பாலம் பணி நடப்பதால் வருஷநாட்டிற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மயிலாடும்பாறை - வருஷநாடு ரோட்டில் ஒன்றிய அலுவலகம் அருகே குழாய் பாலம் சேதமடைந்து இருந்தது.இதனை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் ரூ.12 லட்சத்தில் அமைக்கும் பணி நடந்தது. மாற்றுப்பாதை அமைக்காமல் பணி செய்தனர். இதனால் வருஷநாடு பகுதிக்கு போக்குவரத்து தடைபட்டது. வருஷநாட்டை சுற்றியுள்ள பல கிராம மக்கள் 10 கி.மீ. சுற்றி ஆட்டோ, டூவீலர்களின் சென்றனர்.

பஸ் போக்குவரத்து இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.ஆண்டிபட்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ''தனியார் இடத்தின் வழியாக பாதை கோரியிருந்தோம்.அவர்கள் பாதையைஅடைத்து விட்டனர். தற்போது பாலம் வேலை முடிந்து 14 நாட்கள் கியூரிங் செய்ய வேண்டும். ஜூன் 15ல் பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் ,''என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X