தரம் குறைந்த அரிசி வாங்காதீர் :அரிசி வியாபாரிகள் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரம் குறைந்த அரிசி வாங்காதீர் :அரிசி வியாபாரிகள் எச்சரிக்கை

Added : ஜூன் 12, 2020
Share

கோவை:லாரிகளில் வரும் தரம் குறைந்த அரிசியை வாங்கி, மக்கள் ஏமாற வேண்டாம் என, கோவை அரிசி வியாபாரிகள் சங்கம், வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களில் இருந்து, லாரிகளில் அரிசி மூட்டைகளுடன் வந்துள்ள சிலர், அதை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட மாவட்ட அரிசி ஆலைகளில் இருந்து வருவதாகக்கூறும் அவர்கள், தரமற்ற அரிசி ரகங்களை, உயர்தர பொன்னி, ராஜபோகம்எனக்கூறி, 25 கிலோ சிப்பம் ஒன்று, 800 ரூபாய்க்கு விற்கின்றனர்.ஆனால், 'ஏடிடி 51' எனும், இந்த அரிசி ரகங்கள் மொத்த விற்பனைக் கடைகளில், 25 கிலோ, 700 முதல், 750 ரூபாய் விலையில் கிடைக்கிறது. மக்கள் லாரிகளில் வரும், தரம் குறைந்த புதிய ரக அரிசியை அதிக விலைக்கு வாங்கி ஏமாற வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X