பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு நிவாரணம் என்னாச்சு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கோவை:அனைத்து தொழிலாளர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணம் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் எழுந்துள்ளது.கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், பாப்பநாயக்கன்பாளையம் ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது.அண்ணா கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் முருகேசன் தலைமையில், எல்.பி.எப்., சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி உட்பட, பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'தபால் நிலையத்தில் வங்கி கணக்கு துவங்கினால், ஊரடங்கு நிவாரணம் ரூ.2000 கிடைக்கும் என்றது அரசு. கணக்கு துவங்கியும் நிவாரணம் கிடைக்காததால், உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X