பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணியில் இறப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சென்னை; 'கொரோனா தொற்று தடுப்பு பணியின் போது இறந்த, அரசு அலுவலர்களுக்கு, அரசு நிவாரண நிதி, 50 லட்சம் ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றியத்தின் மாநில உயர்நிலை குழு கூட்டம், மாநில தலைவர் சண்முகராஜன் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.'கொரோனா தடுப்பு பணியின் போது, நோய் தொற்று ஏற்பட்டால், சிகிச்சைக்கான முழு செலவையும் அரசு ஏற்கும்; முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.'எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, ஏப்ரல், 22ல் முதல்வர் அறிவித்தார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட, கன்னியாகுமரி மாவட்ட, அங்கன்வாடி பணியாளர் சொர்ணாபாய்; மதுரை மாவட்ட, சுகாதார ஆய்வாளர் சவுண்டையா; கடலுார் மாவட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ். திருச்சி மாவட்ட வருவாய் ஆய்வாளர் சேகர்; மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உதவியாளர் தினகரன்; சென்னை வடக்கு, சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் முதுநிலை கண்காணிப்பாளர் பிரிசில்லா லாரன்ஸ் என, 13க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.அவர்கள் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது. குடும்ப வாரிசுகளுக்கு, பணி நியமனமும் வழங்கப்படவில்லை.எனவே, முதல்வர் உடனடியாக, இறந்தவர் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி, அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X