பொது செய்தி

தமிழ்நாடு

ஒருவழியாக பருத்தி சாகுபடி முடிந்தது அடுத்ததாக கோடை உழவு துவக்கம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
 ஒருவழியாக பருத்தி சாகுபடி முடிந்தது  அடுத்ததாக கோடை உழவு துவக்கம்

கோவை:கோவை கிணத்துக்கடவு பகுதியில், 337 எக்டரில் ஆங்கூர் ரக பி.டி. பருத்தி, மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை பணி முடிந்து, அடுத்த சாகுபடிக்கு கோடை உழவுப்பணி நடக்கிறது.பொள்ளாச்சி, தொண்டாமுத்துார் மற்றும் அன்னுார் வட்டாரங்களில், காரிப் பருவ பருத்தி சாகுபடிக்கான உழவுப்பணிகள் நடக்கின்றன.
கிணத்துக்கடவு வட்டாரம் வடபுதுார் கிராமம் காதறுத்தான் மேடு பகுதியிலும், பருத்தி அறுவடை முடிந்து உழவுப்பணிகள் நடக்கின்றன. அப்பகுதியில் பஞ்சு கொட்டை பருத்தி அறுவடை முடியும் தருவாயில் இருப்பதால், அப்பகுதி விவசாயிகளை் உதவி வேளாண் இயக்குனர் மற்றும் இணை வேளாண் அலுவலர் ஆகியோர், நேரில் சந்தித்து கடைசி நிலை பருத்தியை, அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய, நடவடிக்கை எடுத்தனர்.
பருத்தி பஞ்சு எடுக்கும் இயந்திரம், மானிய விலையில் வழங்கப்படும் திட்டம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறுகையில், ''போதிய மழை இல்லாததால், மானாவாரி நிலத்தில் பருத்தி அறுவடை முடிந்தும், மிளார்கள் அகற்றப்படாமல் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பருத்தி அறுவடை பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. மழை செய்த பின், விவசாயிகள் மிளார்களை அகற்றி, உழவு செய்து சோளம் பயிரிட உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X