பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு 50 சதவீத படுக்கை ஒதுக்கீடு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கோவை:தமிழகத்தில் உள்ள, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுடன் இணைந்த, மருத்துவமனைகளில், 50 சதவீத படுக்கைகளை, கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.இது தொடர்பான கூட்டம், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் உள்ளிட்ட, அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சில் நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க, மருத்துவமனை நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.இத்தகவலை, தமிழ்நாடு அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கூட்டமைப்பின் செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X