பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கட்டணம் செலுத்த கட்டாயம் பள்ளிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கோவை:தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்கள் வசூல் செய்வதை கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், முதன்மை கல்வி அலுவலர் உஷா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் உள்ள சில மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவும், நோட்டு புத்தகங்களுக்கான கட்டணங்கள் செலுத்தவும் கோரி, பெற்றோர்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக, அனைத்து தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம், 2020-2021ம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணம், கடந்த ஆண்டின் நிலுவை கட்டணங்களை செலுத்த, வற்புறுத்தக்கூடாது என, ஆணையிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக்கட்டணம் தொடர்பான அரசாணை விவரம், சுற்றறிக்கையாக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறி கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X