மாஸ்க் இல்லையா பைன் போடுங்க| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' இல்லையா 'பைன்' போடுங்க

Added : ஜூன் 12, 2020
Share

அன்னூர்:அன்னூர் ஒன்றியத்தில், பொதுமக்கள் கண்டிப்பாக, முக கவசம் அணிந்து வெளியே வரும்படி தண்டோரா போட்டு அறிவுறுத்தப்படுகிறது.இது குறித்து ஆய்வு செய்ய, கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாதேவி, நேற்று வடக்கலூர் ஊராட்சிக்கு சென்றார்.அங்கு ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்களிடம், "ஊராட்சியில், தேவையான அளவு முகக்கவசம் வைத்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல், பொது இடங்களுக்கு வருவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்," என, அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X