சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றில் பறந்து சாலையில் விழுந்த மேற்கூரை தகரம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
காற்றில் பறந்து சாலையில் விழுந்த மேற்கூரை தகரம்

கோத்தகிரி:கோத்தகிரி ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியின், மேற்கூரை தகரம், காற்றில் பறந்து சாலையில் விழுந்தபோது, மக்கள் இல்லாததால், பாதிப்பு தவிர்க்கப்பட்டது.கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில், 59 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், குறைந்த மாணவர்கள் மட்டுமே தங்கியுள்ளனர். விடுதி மேற்கூரை ஒழுகிய நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு, கூரை மட்டத்தில் இருந்து, மூன்று அடி உயரத்தில், தகரத்தில், மேற்கூரை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி பகுதியில் சூறாவளி காற்று வீசிய நிலையில், மேற்கூரை தகரம் காற்றில் பறந்து, தாசில்தார் அலுவலக சாலையில் விழுந்தது. இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மின் வயர்கள் அறுந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது. அதிகாலையில், மின்துறை, வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர், சாலையில் விழுந்த தகரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.மக்கள் கூறுகையில், 'இந்த தரமில்லாத பணியை செய்த ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X