பொது செய்தி

தமிழ்நாடு

1. 80 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது : திண்டுக்கல்லில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ துறையின் மூலம் ஆரோக்கியா திட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு காலை, மாலைகளில் வழங்கப்படுகிறது.குணமடைந்து செல்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் அடங்கிய மருந்து பெட்டகம் சித்த மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது.

வீடுகளில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகள், அரசு அலுவலங்கள், நீதிமன்றங்களிலும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 27 ஆயிரத்து 412 பேருக்கு நிலவேம்பு குடிநீரும், 1 லட்சத்து 86 ஆயிரத்து 192 பேருக்கு கபசுர குடிநீரும், குணமடைந்து வீடு திரும்பிய 48 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X