பொது செய்தி

இந்தியா

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.12,201 கோடி கடன் தரப்பட்டுள்ளது

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி; குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பொதுத் துறை வங்கிகள், ஒன்பது நாட்களில், 12 ஆயிரத்து, 201 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு, மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய், ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது. அதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள தகவல்:அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், நடப்பு, ஜூன், 1 - 9 வரை, பொதுத் துறை வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 24 ஆயிரத்து, 260 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. அதில், 12 ஆயிரத்து, 201 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, தமிழகத்தில், 2,637 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அதில், 1,727 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து, உத்தர பிரதேசத்தில், 2,547 கோடி ரூபாய் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில், 1,225 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 13 ஆயிரத்து, 363 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்து, 7,517 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. பேங்க் ஆப் பரோடா, 1,893 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 526 கோடி ரூபாய் பெற்றுள்ளன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 1,842 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்து, 794 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, 1,772 கோடி ரூபாய் கடன் விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது.

அதில், 656 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அவசர கடன் உத்தரவாத திட்டத்தில், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் விற்றுமுதல் கண்டு வரும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 'முத்ரா' திட்ட பயனாளிகள் உள்ளிட்டோர், கடன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
12-ஜூன்-202007:35:37 IST Report Abuse
Ramachandran Rajagopal இலக்கினை எட்டுவதற்காக இலவச எரிவாயு திட்டத்தில் ஏற்கெனவே கணவன் பெயரில் இணைப்பு இருக்கும் நிலையிலும் பெண்கள் பெயரில் இணைப்பு கொடுத்ததுபோல ஏமாற்றுப் பேர்வழிகளுக்கெல்லாம் கடன் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வேலையைத்தான் செய்து முடித்து கோடி கணக்கானவர்களுக்கு உதவி செய்து நாட்டை முன்னேற்றிவிட்டதாக பிதற்றிக்கொண்டிருப்பர்.அத்தகைய விளம்பரத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருப்பர்.இதுதான் இந்த நாட்டின் தலை எழுத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X